கேரளாவில் கால் பதித்த பாஜக - சுரேஷ் கோபி வெற்றி

 
rr

கேரளாவில் கேரளாவின் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளரும் நடிகருமான சுரேஷ் கோபி வெற்றி பெற்றுள்ளார்.

tt

சுரேஷ் கோபி 2019 பொதுத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் திருச்சூரில் இருந்து பாஜக  வேட்பாளராக களமிறங்கிய நிலையில்  இரண்டு தேர்தல்களிலும் தோல்வியடைந்தார். இருப்பினும் , 2024ல் மீண்டும் அவர் பாஜக சார்பில் திருச்சூரில் களமிறக்கப்பட்டார். 

rrr

கேரளாவின் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளரும் நடிகருமான சுரேஷ் கோபி வெற்றி அடைந்துள்ளார். இதன் மூலம்  கேரளாவில் தனது எண்ணிக்கையை பாஜக துவங்கியது. நடிகராகவும், அரசியல்வாதியாகவும் மாறிய சுரேஷ் கோபி, கேரளாவில் இருந்து பாஜக சார்பில் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் லோக்சபா எம்பி என்ற வரலாற்றை எழுதத் தயாராகிவிட்டார். ​​திருச்சூர் தொகுதியில்  70,000 வாக்குகளுக்கு மேல் முன்னிலை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.