மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாக நான் கூறவில்லை- சுரேஷ் கோபி

 
suresh gopi

ஒன்றிய இணை அமைச்சராக தொடருவேன், நான் ராஜினாமா செய்ய போவதாக வெளியான தகவல் தவறானது என கேரள நடிகரும், பாஜக எம்பியுமான சுரேஷ் கோபி அறிவித்துள்ளார். 


suresh

கேரளாவில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகர் சுரேஷ் கோபி நேற்று மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாக நான் கூறவில்லை என சுரேஷ் கோபி விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து விளக்கம் அளித்துள்ள அவர், “பதவி விலகுவதாக சில ஊடகங்களில் வெளியான தகவல் முற்றிலும் தவறானது.

Image

கேரள மாநில பிரதிநிதியாக மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பதில் பெருமை கொள்கிறேன். மோடியின் தலைமையின் கீழ் கேரளாவின் வளர்ச்சிக்கு பாடுபடுவதில் உறுதியுடன் இருக்கிறோம். மத்திய அமைச்சராக தொடர்கிறேன். பிரதமர் மோடி அமைச்சரவையில் பணியாற்றுவது எனக்கு கிடைத்த கவுரவம்” எனக் கூறியுள்ளார்.