சலூன் கடைகளை திறக்க அனுமதி கொடுத்தா அவங்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும்…. மகாராஷ்டிரா அரசுக்கு சுப்ரியா சூலே வேண்டுகோள்..

சலூன் கடைகளை திறக்க அனுமதி கொடுத்தா அவங்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும்…. மகாராஷ்டிரா அரசுக்கு சுப்ரியா சூலே வேண்டுகோள்..

நாடு தழுவிய லாக்டவுன் அமலுக்கு வந்தது முதல் மகாராஷ்டிராவில் சலூன் கடைகள் திறக்கப்படவில்லை. தற்போது லாக்டவுன் தளர்வுகள் தற்போது அமலில் உள்ளநிலையிலும் மகாராஷ்டிராவில் மட்டும் இன்னும் சலூன் கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் பல குடும்பங்களில் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து தங்களது முடிவெட்டி கொண்டனர். குறிப்பாக கிரிக்கெட் கடவுள் என்றழைக்கப்படும் சச்சின் தனது மகன் அர்ஜூனுக்கு ஹேர்கட் செய்த வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

சலூன் கடைகளை திறக்க அனுமதி கொடுத்தா அவங்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும்…. மகாராஷ்டிரா அரசுக்கு சுப்ரியா சூலே வேண்டுகோள்..

பல மாதங்களாக சலூன் கடைகள் மூடப்பட்டு இருப்பதால் இந்த வர்த்தக துறையை சேர்ந்தவர்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்க தவிக்கின்றனர். இந்த சூழ்நிலையில், மகாராஷ்டிராவில் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரியா சூலே மகாராஷ்டிரா அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட லாக்டவுனால் சலூன் வர்த்தகம் முழுமையாக அடைக்கபட்டுள்ளது. இதனால் இந்த வர்த்தகத்தை சார்ந்துள்ள சிறு சமுதாயம் கடுமையான நிதி நெருக்கடிகளை எதிர்கொள்கிறது.

சலூன் கடைகளை திறக்க அனுமதி கொடுத்தா அவங்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும்…. மகாராஷ்டிரா அரசுக்கு சுப்ரியா சூலே வேண்டுகோள்..

இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பல குடும்பங்கள் தற்போது கடுமையான நிதிநெருக்கடிகளை சந்தித்து வருகிறது. சலூன் அவர்களின மோசமான நிதி நிலைமையை இருப்பதை அனுதாபத்துடன் கருதி அவர்களை வர்த்தகத்தை செய்ய அனுமதியுங்கள் என நாங்கள் தாழ்மையுடன் வேண்டுகோள் விடுக்கிறோம் என மராத்தியில் பதிவு செய்து இருந்தார். மேலும் கடைக்காரர்கள் சமூக விலகல் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் சுப்ரியா சூலே பதிவு செய்து இருந்தார்.