தேர்தல் பத்திரங்கள் வழக்கில் எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 
supreme court supreme court

தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் வெளியிட உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

SBI வாடிக்கையாளர்களே உஷார்… அக்கவுண்டில் பணத்தை சுருட்டும் சீன ஹேக்கிங் கும்பல்!

அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக நன்கொடை தருவதை தவிர்க்கும் பொருட்டு 2018 ஜனவரியில் 'தேர்தல் பத்திரம்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறைக்கு எதிரான வழக்கு  உச்சநீதிமன்றத்தில்  நடைபெற்று வந்தது.  நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்கத் தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியல் சட்டத்திற்கு புறம்பானவை. நன்கொடை வழங்குவது என்பது அரசியல் கட்சியிடம் ஆதாயத்தை எதிர்பார்த்து செய்வது தற்போதுள்ள சட்டங்கள், தேர்தல் நிதியை கார்ப்பரேட், தனி நபர்கள் மூலம் பெற வழிவகுக்கிறது என்று  தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். எனவே தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து செய்யப்பட்டது.  இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நிதிப் பத்திரங்கள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு, தேசிய அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

election commision
இந்நிலையில் தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் எஸ்பிஐ வங்கி வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட எஸ்பிஐ வங்கி கால அவகாசம் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பத்திர விவரங்களை மார்ச் 15க்குள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஆணை பிறப்பித்துள்ளது.