சண்டிகர் மேயர் தேர்தல் சர்ச்சை- உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

 
supreme court

சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். 

சண்டிகர் மேயர் தேர்தலின் போது வாக்குச்சீட்டில் திருத்தங்கள் செய்து 8 வாக்குகளை செல்லாது என அறிவித்து பாஜக மேயர் வேட்பாளரை வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது தேர்தல் அதிகாரியின் செயலுக்கு தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். சொலிசிட்டர்  ஜெனரல் அவர்களே போய் அந்த தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சொல்லுங்கள் உச்சநீதிமன்றம் அவரை பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் முறையான இடைக்கால உத்தரவை பிறப்பிக்க தவறிவிட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரி கேமராவைப் பார்த்துக்கொண்டு ஒரு திருடனைப் போல ஏன் செயல்படுகிறார்?

court

 தேர்தல் அதிகாரி வாக்கு சீட்டுகளை திருத்தியுள்ளது வெளிப்படையாக தெரிகிறது. இப்படியா அவர் தேர்தல் நடத்துகிறார்? இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல். இது ஜனநாயக படுகொலை. இவ்விவகாரத்தில் எங்களது அனைத்து சந்தேகங்களுக்கும் பதிலளிக்க வேண்டும். பதில் திருப்தி அளிக்கவில்லை என்றால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்.  மேயர் தேர்தல் நடத்தப்பட்ட அனைத்து வீடியோ பதிவுகளையும் பாதுகாக்க வேண்டும். அடுத்த உத்தரவு வரும் வரை சண்டிகர் மாநகராட்சி கூட்டம் நடத்தக் கூடாது . அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறினார்.