நீட் முறைகேடு வழக்கு - ஜூலை 18க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

 
tt

நீட் தேர்வு தொடர்பான வழக்குகளின் விசாரணையை ஜூலை 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

neet

நீட் தேர்வு முறைகேடு வழக்கு விசாரணையை ஜூலை 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். திங்களன்று வழக்கில் ஆஜராக இயலாது என்பதால் ஒத்திவைக்க வேண்டும் என சொலிசிட்டர் ஜெனரல் கோரிக்கை விடுத்தார். சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் கோரிக்கையை அடுத்து வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

supreme court

நீட் முறைகேடு தொடர்பான வழக்குகள் மீதான விசாரணை வரும் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதால் எம்.பி.பி.எஸ்., BDS உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு மேலும் தாமதமாக வாய்ப்புள்ளது.  ஜூலை மூன்றாம் வாரம் கலந்தாய்வு தொடங்கும் என மத்திய அரசு கூறியிருந்த நிலையில் மேலும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.