மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சம்மன்..

 
Mallikarjuna Kharge Mallikarjuna Kharge

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 

 கர்நாடகாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டபேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக இத்தேர்தலின் பரப்புரையின் போது  காங்கிரஸ் கட்சி, 'பஜ்ரங் தள் அமைப்பை தடை செய்வோம்' எனக் வாக்குறுதியாக குறிப்பிட்டிருந்தது. இதற்கு பாஜக உள்ளிட்ட சில  இந்து  அமைப்புகள் கடும்  எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், கர்நாடக தேர்தல் பரப்புரையில் காங்கிரஸ் கட்சியின்  தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பை போன்று பஜ்ரங் தள் அமைப்பை நிச்சயம் தடை செய்வோம்' எனவும் தெரிவித்திருந்தார். 

இதற்கு, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த பி.எப்.ஐ உடன் பஜ்ரங் தள் அமைப்பை தொடர்புப்படுத்தி பேசிவதான கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அத்துட்ன் இந்து சுரக்ஷா பரிஷத் நிறுவனர் ஹிதேஷ் பரத்வாஜ், மல்லிகார்ஜூன கார்கே மீது ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு பஞ்சாப் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.  இந்த நிலையில், அவதூறு வழக்கு தொடர்பாக பதிலளிக்குமாறு பஞ்சாப் மாநிலம் சங்ரூர் நீதிமன்றம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சம்மன் அனுப்பியிருக்கிறது. மேலும் ஜூலை 10-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.