கொளுத்தும் வெயில்.. பஞ்சாப்பில் மே.14 முதல் கோடை விடுமுறை.. முதல்வர் பகவந்த மான் அறிவிப்பு..

 
கொளுத்தும் வெயில்.. பஞ்சாப்பில் மே.14 முதல்  கோடை விடுமுறை.. முதல்வர் பகவந்த மான் அறிவிப்பு..

பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் கடும் வெயில்  காரணமாக, வரும் மே 14-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக  அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

Bhagwant mann - punjab CM

இந்த ஆண்டு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்லவே அஞ்சும் அளவிற்கு வாட்டி வதைத்து வருகிறது. பணிச்சூழல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே இருப்பவர்களும், மரத்தின் நிழலை தேடியோ, கடைகளின் நிழல்களிலோ தஞ்சம் அடைகின்றனர்.  அதிலும் பஞ்சாப், டெல்லி, ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் இயல்பைவிட  சில புள்ளிகள் வெளியில் கூடுதலாகவே காணப்படுகிறது. வெப்ப நிலையோடு ஆங்காங்கே  அனல் காற்றும் வீசுவதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியிருக்கின்றனர்.  

கொளுத்தும் வெயில்.. பஞ்சாப்பில் மே.14 முதல்  கோடை விடுமுறை.. முதல்வர் பகவந்த மான் அறிவிப்பு..

அந்தவகையில், அதிகபட்சமாக  அமிர்தசரஸில்   42.3 டிகிரி செல்சியசும், லூதியானாவில் 43.2 டிகிரி செல்சியசும் மற்றும் ஜலந்தரில் 42.7 டிகிரி செல்சியசும்  வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறை அளிக்க பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் பகவந்த் மான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “பஞ்சாப் மாநிலத்தில் நிலவி வரும் கடுமையான வெப்பம் காரணமாக ஆயிரக்கணக்கான பொற்றோர்களும், ஆசிரியர்களின் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு வரும் மே 14-ம் தேதி முதல் பஞ்சாபின் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.