கட்சியை விட்டு வெளியேறியவர்களுக்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்... சச்சின் பைலட்டை எச்சரித்த காங்கிரஸ்

 
கோட்டா குழந்தைகள் இறப்பு…. முந்தைய பா.ஜ.க. அரசை குறை கூறுவதில் அர்த்தமில்லை… காங்கிரஸ் துணை முதல்வர் சச்சின் பைலட்

காங்கிரஸ் கட்சி யாரையும் குறிப்பாக பழைய தலைவர்களை வெளியேற்றுவதில்லை. ஆனால் கட்சியை விட்டு வெளியேறியவர்களுக்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும் என்று சச்சின் பைலட்டுக்கு ராஜஸ்தான் காங்கிரஸின் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா மறைமுகமாக எச்சரிக்கை செய்தார்.

ராஜஸ்தான் காங்கிரஸின் பிரபல தலைவரும், அம்மாநில முன்னாள் துணை முதல்வருமான சச்சின் பைலட், முந்தைய பா.ஜ.க. ஆட்சியின் போது நடந்த ஊழல் வழக்குகளில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான  அரசு செயல்படாததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரியும் கடந்த 11ம் தேதி முதல்  ஐந்து நாட்கள் அஜ்மீரிலிருந்து ஜெய்ப்பூர்  வரை ஜன் சங்கர்ஷ் யாத்திரை மேற்கொண்டார். இது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

நான் அசோக் கெலாட் அரசை காப்பாற்ற முயற்சி செய்தேனா?.. மவுனத்தை கலைத்த பா.ஜ.க.வின் வசுந்தரா ராஜே…

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் சச்சின் பைலட்டின் எதிர்காலம் குறித்து ராஜஸ்தான் காங்கிரஸின் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா பேட்டி ஒன்றில் கூறியதாவது:  காங்கிரஸ் கட்சி யாரையும் குறிப்பாக பழைய தலைவர்களை வெளியேற்றுவதில்லை. ஆனால் கட்சியை விட்டு வெளியேறியவர்களுக்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். எல்லோருக்கும் தெரியும். 

சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா

கட்சி மன்றத்தில் நீங்கள் (சச்சின் பைலட்) பிரச்சினையை எழுப்பியபோது கட்சி உங்கள் பேச்சை கேட்கவில்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள். இது (சச்சின் பைலட்டின் யாத்திரை) ஒரு தனிப்பட்ட யாத்திரை என்று இன்றும் சொல்கிறேன். காங்கிரஸூக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை. யாத்திரைகள் எடுக்கப்பட வேண்டும் ஆனால் கர்நாடகாவில் வாக்குப்பதிவுக்கு முன் அதை ஏற்பாடு செய்தது,  நான் அதை நல்ல விஷயமாக கருதவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.