சஹாரா குழும நிறுவனர் சுப்ரதா ராய் காலமானார்!
Updated: Nov 15, 2023, 07:00 IST1700011825057

சஹாரா குழும நிறுவனர் சுப்ரதா ராய் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார்.அவருக்கு வயது 75.
இந்நிலையில் சஹாரா குழும நிறுவனர் சுப்ரதா ராய் (75) மாரடைப்பால் நேற்று இரவு உயிரிழந்தார். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்பட பல உடல்நல கோளாறுகளால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிர் பிரிந்தது . இதையடுத்து சுப்ரதா ராய்-ன் உடல் இறுதிச் சடங்குகளுக்காக இன்று உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவுக்குக் கொண்டு வரப்பட உள்ளது.அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் கூறி வருகின்றனர்.