இந்திய கிரிக்கெட் அணிக்கு சோனியா காந்தி வாழ்த்து!

 
sonia

உலக கோப்பை இறுதிப் போட்டியில் இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ள நிலையில், இந்திய அணிக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. பிற்பகல் சரியாக 2 மணிக்கு இறுதிப் போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. நடப்பு உலக கோப்பை போட்டியில் தோல்வியே சந்திக்காத அணியாக திகழும் இந்திய அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. இதேபோல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 6வது முறையாக கோப்பையை கைப்பற்ற ஆஸ்திரேலிய அணி முனைப்பு காட்டி வருகிறது. 

INDvsAUS

இந்த நிலையில்,  இந்திய கிரிக்கெட் அணிக்கு சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சோனியா காந்தி, உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடும் இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள். நாட்டிற்கு நீங்கள் தொடர்ந்து பெருமை சேர்க்கிறீர்கள். இறுதிப்போட்டிக்கான உங்கள் பயணம் மிகவும் உத்வேகமளிக்கிறது, ஒற்றுமை, கடின உழைப்பு, உங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை என மதிப்புமிக்க பல பாடங்களைக் கொண்டுள்ளது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.