இந்திரா காந்தியின் நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி அஞ்சலி

 
congress

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 106வது பிறந்த நாளையொட்டி சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 106வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்த நாளை காங்கிரஸ் தொண்டர்கள் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதேபோல் இந்திரா காந்தியின் பிறந்த நாளையொட்டி தலைவர்கள் பலரும் அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். மேலும் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


இந்த நிலையில், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இந்திரா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களின் 106-வது பிறந்தநாளான இன்று அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் அன்னை சோனியா காந்தி , ராகுல் காந்தி, ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். வலிமை, தைரியம் மற்றும் திறமையான தலைமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய இந்தியாவின் 'இரும்புப் பெண்மணி' இந்திரா காந்தி அவர்களை இன்று நாடு முழுவதும் நினைவு கூர்கிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.