”ராகுல் காந்தி போராட்டம் நேர்மையற்றது”- சோனம் வாங்சுக் மனைவி கீதாஞ்சலி

 
s

பிரதமர் இல்லம் முன் ராகுல் நடத்திய போராட்டம் நேர்மையற்றது என சோனம் வாங்சுக் மனைவி கீதாஞ்சலி கூறியுள்ளார்.

உண்மையான போராட்டம் எது, அடையாள போராட்டம் எது..? - காங்கிரஸ் மீது சோனம்  வாங்சுக் மனைவி விமர்சனம் | Congress's protest near PM's house insincere:  Big remark by Sonam Wangchuk's ...


டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக போராடும் கரப்பான் ஜனதா கட்சியினர், நாடு முழுவதும் போராட்டத்தை விரிவுப்படுத்துகின்றனர். நாளை மாவட்டந்தோறும் அமைதியான வழியில் போராட்டம் நடத்த கரப்பான் ஜனதா கட்சி அழைப்பு விடுத்துள்ளது. தன்னெழுச்சியாக போராட்டம் பரவிவரும் நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நிலையில் போராட்டம் குறித்து கருத்துக் கூறியுள்ள சோனம் வாங்சுக் மனைவி கீதாஞ்சலி,  “ஜந்தர் மந்தரில் போராடும் மாணவர்களை நேரில் சந்திக்காமல் பிரதமர் இல்லம் முன்பு ராகுல் காந்தி போராட்டம் நடத்தியது நேர்மையற்றது. அதற்குப் பதிலாக ஜந்தர் மந்தரில் மாணவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தி ஆதரவு தெரிவித்திருக்க வேண்டும். உண்மையான போராட்டம் எது, அடையாள போராட்டம் எதுவென்று மக்களுக்கு தெரியும். அவர்களை ஏமாற்ற முடியாது. நேர்மையற்றவர்கள் இளைஞர்களால் தூக்கி எறியப்படுவார்கள். போராடும் மாணவர்களை தேச விரோதிகளாக சித்தரித்து ஒடுக்கப் பார்க்கும் பாஜக, உண்மையான இந்து கட்சியோ, தேசியவாத கட்சியோ அல்ல” என்றார்.