திறப்பு விழாவுக்கு தயாராக இருந்த காபி ஷாப் கூரை சரிந்து விழுந்து உரிமையாளரின் மனைவி, மகன் உயிரிழப்பு

 
)s )s

தெலங்கானா மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில்  திறப்பு விழாவிற்கு இருந்த காபி ஷாப்பில் மேற்கூரை விழுந்து உரிமையாளர் மனைவி, மகன் பலியாகினர்.

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், சித்யாலா மண்டலம்  பெடகபர்த்தி கிராமத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் காபி ஷாப் அமைத்துள்ளார். இன்று காலை இந்த காபி ஷாப்பை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. மாலை வரை திறப்பு விழாவுக்கு மும்முரமாக இருந்த ரமேஷ் குடும்பத்தினர், இரவு தாமதமாகிவிட்டதால்ஹோட்டலில் தங்கினர். ஹோட்டல் மேற்கூறை சிமெண்ட் ஷீட்டால் போடப்பட்டு அதன் மேல் தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டுருந்தது. 

இதனால் தண்ணீர் தொட்டியின் பாறம் தாங்காமல் அதிகாலையில் மேற்கூறை இடிந்து தண்ணீர் தொட்டி கீழே படுத்திருந்த  ரமேஷின் மனைவி நாகமணி (32), மகன் வம்சி கிருஷ்ணா (6) ஆகியோர் மீது விழுந்ததில் இருவரும் அதே இடத்தில் இறந்தனர்.  ரமேஷின் தாயும் மகளும் படுகாயமடைந்தனர். அவர்களை உடனடியாக  நர்கெட்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.