ரூ.100 கோடி சொத்துக்காக தாய் கொலை- தந்தை , அண்ணன், அண்ணி உயிர் தப்பினர்

 
 ரூ.100 கோடி சொத்துக்காக தாய் கொலை-  தந்தை , அண்ணன், அண்ணி உயிர் தப்பினர்

தெலங்கானாவில் ரூ.100 கோடி சொத்துக்காக தாய் கொலை செய்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murder


தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம்  தெல்லாபூரைச் சேர்ந்த  மல்லரெட்டி -  ராதிகா ரெட்டி தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.   மூத்த மகன் சந்தீப் ரெட்டி ஒரு தனியார் நிறவனத்தில் பணி புரிகிறார்.  இளைய மகன் கார்த்திக் ரெட்டி (26) பி.டெக் முடித்து வேலையில்லாமல் உள்ளார்.   அவர்கள் தெல்லாப்பூரில் உள்ள டிவினோவின் வில்லாவில்  வசிக்கிறார்கள். மூத்த மகன் சந்தீப் ரெட்டிக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிரிஷா என்பவருடன் திருமணம் நடந்தது. கார்த்தி போதைக்கு அடிமையாகி அதே பகுதியில் வேறு இடத்தில் தங்கி வந்தான். இதனால் கார்த்திக்கை தவிர மற்ற அனைவரும் ஒன்றாக தங்கி இருந்தனர். இருப்பினும் இளைய மகன் கார்த்தி போதைப் பழக்கத்திற்கு அடிமையானதால் அவரை எப்படியாவது நல்வழிக்கு கொண்டு வர வேண்டும் என   இரண்டு மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள ஒரு மறுவாழ்வு மையத்திற்கு கார்த்திகை  அனுப்பி வைத்தனர்.   ஒரு மாதத்திற்கு முன்பு வீடு திரும்பியதிலிருந்து கார்திக்கும் பெற்றோருடன் தங்கி இருந்தான். ஆனால் கார்த்திக்கின் நடத்தையில் எந்த மாற்றமும் இல்லாமல்  தனக்குச் சேர வேண்டிய சொத்தை தனக்குத் தருமாறு கோரி பெற்றோரிடம் வாக்குவாதம் செய்து வந்தான். ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகளை மொத்தமாக அடைய நினைத்த கார்த்தி  குடும்பத்தினர் அனைவரையும் கொலை   செய்ய சதித்திட்டம் தீட்டினார். இதற்காக  ஆன்லைனில் 6 கத்திகளை ஆர்டர் செய்து பெற்றான்.   ஞாயிற்றுக்கிழமை இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்து அனைவரும் படுக்கைக்குச் சென்றதும் அவரது சதித்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தான்.   திங்கட்கிழமை அதிகாலையில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது ​​முதலில் தனது தாய் ராதிகா ரெட்டி (51) மற்றும் தந்தை மல்லரெட்டியை கத்தியால் தாக்கினார்.   உடனடியாக சுதாரித்து கொண்ட  அவரது தந்தை மல்லரெட்டி, கையில் இருந்த கத்தியைப் பிடிக்க முயன்றபோது காயமடைந்தார்.   இதனால்   அலறிக் கொண்டு வெளியே ஓடினார்.

இந்த சத்தத்தைக் கேட்டு, சகோதரர் சந்தீப் ரெட்டியும் அவரது மனைவியும் மேலே உள்ள படுக்கையறையிலிருந்து கீழே வந்து பார்த்தபோது தாய் ​​ராதிகாவை  மற்றொரு கத்தியால் கண்மூடித்தனமாக   குத்தப்பட்டிருப்பதையும், கடுமையான இரத்தப்போக்கு காரணமாக மயக்கமடைந்திருப்பதையும் கண்டனர். உடனடியாக   சந்தீப் ரெட்டியின் மனைவி சிரிஷா இதைக் கவனித்து, அவரைத் தடுத்து, கீழே செல்ல விடாமல்  ​​சந்தீப் ரெட்டியை  படுக்கையறைக்குள் அழைத்து  சென்று  பூட்டிக் கொண்டார். அவரது தந்தை மல்லாரெட்டி வெளியில் இருந்து கத்திக் கொண்டிருந்ததால், அக்கம்பக்கத்தினர் வெளியே வருவதைக் கவனித்து கார்த்தி அங்கிருந்து தப்பி சென்றான்.    உடனடியாக ராதிகாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.  அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராதிகா சிகிச்சை பலனின்றி  இறந்தார்.   சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கொல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.    மல்லரெட்டி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் கார்த்திகை   கைது செய்து விசாரித்து வருகின்றனர்.