ஓடும் காரின் பின்புறம் பட்டாசுகளை வெடித்து கெத்துக்காட்டிய 3 பேர் கைது

 
Crackers

டெல்லியில் தீபாவளி தினத்தன்று ஓடும் காரின் பின்புறம் பட்டாசுகளை வெடித்தப்படி கெத்துக்காட்டி சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீபாவளி திருநாள் கடந்த 24ம் தேதி கொண்டப்பட்ட நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்  இளைஞர்கள் சிலர் ஸ்கார்பியோ காரின் முன் பக்கம் அமர்ந்து கொண்டும், காரின் மேற்புறத்தில் வான வெடிகளை வைத்து வேடிக்கை காட்டி கெத்தாக வலம் வந்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியான நிலையில், அதனை ஆதாரமாக கொண்டு 8 இளைஞர்களை போலீசார் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடுரோட்டில் தோப்புக்கரணம் போட வைத்த வீடியோ அண்மையில் வைரலானது.


இந்நிலையில் அதேபோன்ற மற்றொரு சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. குருகிராம் நகரில் காரின் பின்புறம் பட்டாசுகளை வெடித்து, தீப்பொறிகளை பறக்கவிட்டு பொதுமக்களுக்கும், சக வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் காரில் பட்டாசு வெடித்தப்படி அவர்கள் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.