நிரந்தரமாக மூடப்பட்டது Koo செயலி!

 
r

டெல்லி விவசாயிகள் போராட்டத்திலிருந்தே ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் உரசல்கள் ஏற்பட்டு வருகின்றன. அரசுக்கு எதிராக கருத்து சொல்பவர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் அது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று கூறி கணக்குகளை முடக்க ட்விட்டர் மறுத்தது. அப்போதிருந்தே ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. அதேபோல மத்திய அரசு கொண்டுவந்த புதிய ஐடி விதிகளுடன் ட்விட்டரை தவிர மற்ற சமூக வலைதள நிறுவனங்களும் இணங்கின.

fff

ஆனால் ட்விட்டர் மட்டும் அரசுக்கு தண்ணி காட்டி வந்தது. மாறாக புதிய விதிகள் இந்தியர்களின் கருத்துரிமைக்கு எதிராக இருப்பதாக குற்றஞ்சாட்டியது. ட்விட்டரின் தொடர் மோதல் போக்கை அடுத்து மத்திய அரசு ட்விட்டருக்கு எதிராக இந்திய செயலி ஒன்றை ஊக்குவிக்க விரும்பியது. அதன்படி ட்விட்டருக்கு எதிராக முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான இந்தியர்களுக்குச் சொந்தமான கூ (Koo) செயலியைப் பிரதானப்படுத்தியது. இந்தச் செயலியில் ட்விட்டரில் இருக்கும் அனைத்து அம்சங்களும் உள்ளன.

fff

இந்நிலையில் ட்விட்டருக்கு (X) போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட சமூக வலைத்தளம் Koo. போதிய வரவேற்பு இல்லாததால் இந்த செயலியை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்திருக்கிறார்கள். DailyHunt உட்பட பிற நிறுவனங்களுடன் இணைக்க எடுக்கப்பட்ட முயற்சியும் தோல்வி அடைந்ததால் செயலியை நிரந்தரமாக மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.