ராகுல் காந்தி அவைக்கு வந்து மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக, நாடாளுமன்றத்துக்கு வராமல் இருப்பது வெட்கக்கேடானது.. ஸ்மிருதி இரானி

 
ட்விட்டர் ராணியாக மாறிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி

ராகுல் காந்தி நாடாளுமன்றத்துக்கு வந்து இந்தியாவுக்கு எதிராக பேசியதற்கு மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக, நாடாளுமன்றத்துக்கு வராமல் இருப்பது வெட்கக்கேடானது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

ராகுல் காந்தி அண்மையில் தனது லண்டன் பயணத்தின்போது, இந்திய ஜனநாயக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்றும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் பேச அனுமதிக்கப்படுவதில்லை என்றும் மத்திய பா.ஜ.க. அரசை குற்றம் சாட்டி பேசியிருந்தார். இதற்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் வெளிநாட்டில் இந்தியாவை அவமதித்ததற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், ராகுல் காந்தி நாடாளுமன்றத்துக்கு வந்து இந்தியாவுக்கு எதிராக பேசியதற்கு மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக, நாடாளுமன்றத்துக்கு வராமல் இருப்பது வெட்கக்கேடானது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்தார்.

ராகுல் காந்தி
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது: இங்கிலாந்தில் அவர் (ராகுல் காந்தி)  பேசியதற்கு அடித்தளமாக அமைந்த பொய்கள் ஏராளம். உரையாடல் மற்றும் இந்திய பல்கலைக்கழகங்களுக்கு தனக்கு அணுகல் இல்லை என்று ராகுல் காந்தி கூறினார். அவரை பொறுத்தவரை அது ஜனநாயகத்தின் மரணத்தின் அறிகுறியாகும். 2016ல் ராகுல் காந்தி தேசிய தலைநகரில் உள்ள இந்திய பல்கலைக்கழகத்திற்கு சென்று இந்தியா உங்கள் துண்டுகளாக இருக்கும்  என்ற முழக்கத்தை ஆதரித்தார். அதே மனிதர் ஜம்மு காஷ்மீரில், இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின்போது இந்தியாவில் எல்லாம் நன்றாக  இருக்கிறது என்றார். இதில் எது ஒன்று பொய்?. 

நாடாளுமன்றம்

இந்திய உச்ச நீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளின் மேன்மையை ராகுல் காந்தி தாக்கினார். ராகுல் காந்தி இந்திய நாடாளுமன்றத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஒவ்வொரு இந்திய குடிமகனும் கோரிக்கை வைக்கின்றனர். ராகுல் காந்தி நாடாளுமன்றத்துக்கு வந்து இந்தியாவுக்கு எதிராக பேசியதற்கு மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக, நாடாளுமன்றத்துக்கு வராமல் இருப்பது வெட்கக்கேடானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.