சாய்னா நேவால் குறித்து ஆபாச கமெண்ட்.. நடிகர் சித்தார்த்துக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்...

 
Saina Nehwal - Siddharth


பேட்மிண்டன் விராங்கனை  சாய்னா நேவால்  இழிவுபடுத்தும் வகையில் ஆபாசமாக ட்வீட் போட்ட நடிகர் சித்தார்த் மீது வழக்கு பதிய வேண்டும் என மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

பிரதமர் மோடி ஜனவரி 5 ஆம் தேதி அன்று பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்ருக்கு பொதுக்கூட்டத்திற்காகச் சென்றபோது, போராட்டக்காரர்கள் அவரை  தடுத்து நிறுத்தி முற்றுகையில் ஈடுபட்டனர். இதனால் மோடியின் கார் சுமார் 20 நிமிடங்கள் மேம்பாலத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.  இருப்பினும் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பாததால்  பிரதமர் கூட்டத்தில் பங்கேற்காமல் திரும்பிச் சென்றார்.  அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து , பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

சீன ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சியளித்த சாய்னா நேவால்..!

அந்தவகையில் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலும்  தனது ட்விட்டர் பக்கத்தில், “சொந்த பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் ஏற்பட்டால், எந்த நாடும்  பாதுகாப்பாக இருப்பதாக கூறமுடியாது. அராஜகவாதிகளின் இந்த கோழைத்தனமான தாக்குதலை, என்னுடைய வலிமையான வார்த்தைகளால் கண்டிக்கிறேன்.” என்று பதிவிட்டிருந்தார்.

இதனை ரீட்வீட் செய்து நடிகர் சித்தார்த் பதிவிட்டிருந்த கருத்து சாய்னா நேவாலை இழிவு படுத்தும் விதமாக  இருந்ததாக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  மாநிலங்களவை எம்.பி., பிரியங்கா சதுர்வேதி, பாடகி சின்மயி, நடிகை குஷ்பு,  தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா ஆகியோரும் சித்தார்த்தின் பதிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சினிமாவில் மதத்தை கலக்க கூடாது: பிரபல நடிகையை விமர்சனம் செய்த சித்தார்த்!

இதற்கு விளக்கமளித்துள்ள நடிகர் சித்தார்த், தரக்குறைவாக எதுவும் சொல்லவில்லை என்றும், அவமரியாதை செய்யும் நோக்கிலோ அல்லது தூண்டும் நோக்கத்திலோ சொலவில்லை..என்றும் ட்வீட் செய்தார். இந்நிலையில் நடிகர் சித்தார்த் மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி மஹாராஷ்டிரா டிஜிபி அலுவலகத்தில்  தேசிய மகளிர் ஆணையம் புகார் அளித்துள்ளது. மேலும் இந்த ட்வீட் தொடர்பாக நடிகர் சித்தார்த்துக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.