#BREAKING சித்தராமையா ராஜினாமா
May 28, 2026, 16:01 IST1779964319445
கர்நாடகா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் சித்தராமையா,

கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா, ஆளுநர் மாளிகைக்கு சென்று ராஜினாமா கடிதத்தை வழங்கினார். துணை முதலமைச்சரான டி.கே.சிவக்குமாருக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்தார் சித்தராமையா. கட்சித் தலைமையின் உத்தரவை ஏற்று எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன் என சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார். நாளை புதிய முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 மே மாதம் முதல் முதலமைச்சராக சித்தராமையா பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடதக்கது.

