ராகுல் காந்தியை தனித்தனியே சந்திக்கும் சித்தராமையா, டி.கே.சிவக்குமார்..

 
ராகுல் காந்தியை தனித்தனியே சந்திக்கும் சித்தராமையா, டி.கே.சிவக்குமார்..


 டி.கே.சிவக்குமார்,  சித்தராமையா ஆகியோர் இன்று தனித்தனியே ராகுல்காந்தியை சந்திக்க உள்ளனர்.

நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்திருக்கிறது. ஆனால் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதில் 5வது நாளாக இழுபறி  நீடிக்கிறது. அங்கு முதலமைச்சர் பதவிக்கு எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா, அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே. சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது.  அதேபோல் முதல்வர் பதவிகேட்டு சிவக்குமாரும், சித்தராமையாவும் உறுதியாக இருப்பதால் இறுதி முடிவு எடுக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறி வருகிறது. முன்னதாக இதுகுறித்து முடிவெடுக்க கட்சி மேலிடம் இருவரையும் டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தது.

ராகுல் காந்தியை தனித்தனியே சந்திக்கும் சித்தராமையா, டி.கே.சிவக்குமார்..

அதன்படி, இருவரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து தங்களுக்கே முதல்வர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.   இருதரப்பும் பிடிவாதமாக இருப்பதால், டெல்லியில் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் மாறி, மாறி ஆலோசனை நடத்தி வருகின்றனர். முன்னதாக இந்த விவகாரம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே , ராகுல் காந்தியிடம் ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து இன்று சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் தனித்தனியே ராகுல் காந்தியை சந்திக்க உள்ளனர்.  நாளை (18-ந் தேதி) அல்லது 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல்வர் பதவியேற்பு விழாவிற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதால், இன்றுக்குள் அடுத்த முதல்வர் யார் என்கிற இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.