என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு - கேரளாவில் இன்று முழு அடைப்பு

 
Kerala

என்.ஐ.ஏ. சோதனையை கண்டித்து கேரளாவில் இன்று ஒருநாள் முழு அடைப்புக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாநிலக் குழு  அழைப்பு விடுத்துள்ளது. 

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா,  எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் நேற்று என்ஐஏ சோதனை நடத்தியது. தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டி தருவது  தொடர்பாக அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாப்புலர்  ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை நிர்வாகிகள் இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடைபெற்றது. சென்னை, மதுரை ,திண்டுக்கல் ,கடலூர் ,தேனி, ராமநாதபுரம், தென்காசி ,கோவை ஆகிய மாவட்டங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்கு தொடர்புடைய 60 இடங்களில் தற்போது சோதனை நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதனிடையே என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. 

அதன்படி இன்று கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த முழு அடைப்பு போராட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.  காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.