அதிர்ச்சி! இந்தியாவையே உலுக்கிய ஹத்ராஸ் சம்பவத்தில் 3 பேர் விடுதலை

 
h

இந்தியாவையே உலுக்கிய ஹத்ராஸ் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் மூன்று பேரை விடுதலை செய்துள்ளது நீதிமன்றம்.  

 உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி அன்று நான்கு பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றனர்.   தலித் சமூகத்தைச் சேர்ந்த அந்த பெண்ணை மாற்று சமூகத்தைச் சேர்ந்த 4 பேரும் கடத்திச் சென்று வயல்வெளியில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.  பின்னர் அந்த பெண்ணை கொடூரமாக துன்புறுத்தி இருக்கிறார்கள்.  ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த பெண் உத்தரப்பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.   மேல் சிகிச்சைக்காக டெல்லி சப்தர் கன்ச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி இப்ப உயிரிழந்தார்.

ra

மாற்று சமூகத்தைச் சேர்ந்த 4 பேரும் தங்கள் மகளை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக சித்தரவதை செய்து கொலை செய்துள்ளனர் என்று பெண்ணின் உறவினர்கள் புகார் அளித்திருந்தனர். இந்த புகார்  இந்தியாவையே உலுக்கி எடுத்தது . டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் உயிரிழந்த பின்னர் அந்தப் பெண்ணின் உடலை கிராமத்திற்கு கொண்டு சென்ற அதிகாரிகள் உறவினர்களின் அனுமதி இல்லாமலேயே நள்ளிரவு ஒரு மணி அளவில் உடலை தீ வைத்து எரித்து விட்டனர்.

 உடலை தங்களிடம் ஒப்படைக்கும் படி அதிகாரிகளிடம் கேட்டது போதும் அதற்கு மறுப்பு தெரிவித்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இளம் பெண்ணின் உடலை அதிகாரிகள் தகனம் செய்து விட்டனர்.  இது குறித்த புகைப்படங்கள் வலைத்தளங்களில் வெளியாகி நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

 சம்பவத்தை அடுத்து அப்ப பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் சந்திப், ரவி, லவ் குஷ், ராமு ஆகிய நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர் .  இது குறித்த வழக்கு ஹத்ராஸ் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.   இந்த வழக்கு விசாரணை முடிந்த பின்னர் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று தீர்ப்பளித்த நீதிமன்றம் குற்றம் சாற்றப்பட்டவர்களில்  ரவி ,லவ் கொஸ், ராமு ஆகிய மூன்று பேரை விடுதலை செய்துள்ளது.   அதே நேரம் இந்த வழக்கில் சந்திப் என்கிற 20 வயது இளைஞர் மட்டும் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.  அவருக்கு ஐம்பதாயிரம் அபராதம் விகித்திருக்கிறது.  ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்து உள்ளார் நீதிபதி.