பாஜகவின் தேசிய தலைவர் மாற்றம்?

 
சிவராஜ்

பாஜகவின் புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

I would rather die than ask for anything for myself: Shivraj Singh Chauhan  | எனக்காக எதுவும் கேட்பதற்கு பதிலாக இறந்து விடுவேன்: சிவராஜ் சிங் சவுகான்  உருக்கம்

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பாஜகவின் தேசிய தலைவராக பதவி வகித்து வரும் ஜே.பி.நட்டாவின் பதவிக் காலம் இம்மாதத்துடன் நிறைவடைகிறது. பாஜக கட்சி விதிப்படி, கட்சித் தலைவரின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகளாகும். 2023 ஜனவரியில் நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில் மக்களவை தேர்தலையொட்டி மேலும் ஓராண்டுக்கு பதவி காலம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் பாஜகவின் புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், பாஜக தேசிய செயலாளர் வினோத் தாவ்டே பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய தேசிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக டெல்லியில் ஜே.பி.நட்டா இல்லத்தில், அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டுவருகின்றனர்.