வெறும் 48 வாக்கு வித்தியாசத்தில் எம்.பி.யான சிவசேனா வேட்பாளர்!!

 
rrr

நாட்டிலேயே குறைந்தபட்சமாக மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா வேட்பாளர் ரவீந்திர தத்தாராம் வைகர் மும்பை வடமேற்கு தொகுதியில் வென்றார். அங்குப் போட்டியிட்ட சிவசேனா (தாக்கரே) வேட்பாளர் அமோல் கஜனன் கிர்த்திகரை விட வெறும் 48 வாக்குகள் மட்டுமே ரவீந்திர தத்தாராம் வைகர் கூடுதலாகப் பெற்றுள்ளார்.

vote counting

தேர்தல் ஆணையத்தின் தரவுகளின் படி வாய்க்கர் 4,52,64 வாக்குகளை பெற்றுள்ளார்.  அவரது நெருங்கிய போட்டியாளரான சிவசேனை உத்தவ் தாக்கரை அணியை சேர்ந்த அமோல் கிருத்திகர் 4,52,596 வாக்குகளை பெற்றுள்ளார். இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் வெறும் 48 வாக்குகள் தான். 

ttt

முன்னதாக மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள ஜோகேஸ்வரி கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவான வைகர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் எதிர் கட்சியான சிவசேனை அணியில் இருந்து உத்தவ் தாக்கரே அணியான முதல்வர் ஏக்நாத் இன்றைய தலைமையிலான சிவசேனைக்கு மாறினார். கடைசி நிமிடத்தில் இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் வெற்றி வாகை சூடி உள்ளார்.