மோடி மற்றும் பா.ஜ.க. மீதான வெறுப்பில் ராகுல் காந்தி அனைத்து எல்லைகளையும் தாண்டி விட்டார்.. ஷெசாத் பூனவல்லா தாக்கு

 
மோடி

பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. மீதான வெறுப்பில் ராகுல் காந்தி அனைத்து எல்லைகளையம் தாண்டி விட்டார் என்று பா.ஜ.க.வின் ஷெசாத் பூனவல்லா குற்றம் சாட்டினார்.

காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி உரையாற்றுகையில் மத்திய பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். லண்டனில் நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் காந்தி பேசுகையில், ஐரோப்பாவும், அமெரிக்காவும் ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள், இந்தியாவில் ஜனநாயகத்தின் ஒரு பெரிய பகுதி எவ்வாறு செயல் இழந்து விட்டது என்பதை ஏன் கவனிக்கவில்லை? என பேசியிருந்தார். ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க.வின் ஷெசாத் பூனவல்லா கூறியதாவது:

ஷெஹ்சாத் பூனவல்லா

ராகுல் காந்தி ஒரு தொடர் குற்றவாளி, இந்த முறை அவர் ஒரு நபர் (மோடி) மற்றும் கட்சி (பா.ஜ.க.) மீதான வெறுப்பை இந்தியா மீதான வெறுப்பாக வளர அனுமதித்தபோது அனைத்து வரம்புகளையும் தாண்டி விட்டார். நிலையான இழிந்த மற்றும் பிரச்சாரம் செய்பவர். ராகுல் காந்தியின் கருத்துக்கள் இந்தியாவின் இறையாண்மை மீதான தாக்குதல் மற்றும் அதன் குடிமக்களை அவமதிக்கும் செயல் இல்லையா?. பிரச்சினைகள் இருந்தாலும், உள்நாட்டில் உள்ள பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்கிறோம். 

ராகுல் காந்தி

ஆனால் ராகுல் காந்தி எப்படி அன்னிய நாட்டின் தலையீட்டை நாட முடியும்?. இந்தியா மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்கிறார்?. பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்ற பாகிஸ்தானின் உதவியை நாடிய மணிசங்கர் அய்யரை இன்று ராகுல் காந்தி பின்பற்றியுள்ளார். இது பாரத துரோக செயலாகும். அதுவும் சுதந்திரத்தின் 75வது ஆண்டில் இந்தியா ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்  கொண்டாடும் போது  நீங்கள் ஒரு இந்திய எம்.பி. பிரிட்டனுக்கு சென்று முன்னாள் காலனித்துவ எஜமானரின் தலையீட்டை நாடுகிறீர்கள். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் இங்கிலாந்து வழிநடத்துகிறார், ஆனால் இங்கே ராகுல் காந்தி வெளிநாடடு தலையீட்டை விரும்புகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.