சிறையிலிருக்கும் மகன் ஆர்யன் கானை சந்தித்தார் ஷாருக்கான்!

 
sharukhan sharukhan

போதைப்பொருள் வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் ஆர்யன் கானை நடிகர் ஷாருக்கான் நேரில் சென்று சந்தித்தார்.

மும்பையில் இருந்து அக்டோபர் 3ஆம் தேதி கோவாவுக்கு சென்று கொண்டிருந்த சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் நடுக்கடலில் வைத்து கப்பலில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, கப்பலில் போதைப்பொருள் பார்ட்டி நடந்தது தெரியவந்தது. நடிகர் ஷாருக்கானின் மகனும் அந்த பார்ட்டியில் பங்கேற்றிருந்தார்.

ஆர்யன் கான்

இதையடுத்து, நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 20 பேர் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆர்யன் கான் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்திருந்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த வழக்கு வரும் 26ம் தேதி மீண்டும் விசாரிக்கப்படவுள்ளது.

sharukhan

இந்த நிலையில், சிறையிலிருக்கும் மகனை பார்ப்பதற்காக நடிகர் ஷாருக்கான் இன்று ஆர்தர் ரோடு சிறைக்கு சென்றுள்ளார். கடந்த 3ஆம் தேதி ஆர்யன் கான் கைது செய்யப்பட்டபோது கூட ஷாருக்கான் அவரை பார்க்கவில்லை. வீடியோ கால் மூலமாகவே இருவரும் பேசிக் கொண்டனர். சிறையில் கைதிகளை சந்திப்பதற்கு கட்டுப்பாடுகளும் இருந்ததால் ஷாருக்கானால் மகனை சந்திக்க முடியவில்லை. இத்தகைய சூழலில் மகாராஷ்டிர அரசு நேற்று கைதிகள் தங்களது உறவினர்களை சந்திக்க தளர்வுகளை வழங்கியதால் இன்று ஷாருக்கான் ஆர்யன் கானை சந்தித்து பேசினார்.