ஆணவ கூட்டணியை அப்படியே வைத்திருக்க பிரதமர் பதவி ஒரு பெவிகாலாக மாறிவிட்டது.. ஷாநவாஸ் ஹூசைன்

 
ஷாநவாஸ் ஹூசைன்

ஆணவ கூட்டணியை (எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணி) அப்படியே வைத்திருக்க பிரதமர் பதவி ஒரு பெவிகாலாக மாறிவிட்டது என்று பா.ஜ.க.வின் ஷாநவாஸ் ஹூசைன் தெரிவித்தார்.

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஷாநவாஸ் ஹூசைன் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: கமாண்டியா கூட்டணியை (எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணி) அப்படியே வைத்திருக்க பிரதமர் பதவி ஒரு பெவிகாலாக மாறிவிட்டது. 2024ல் பிரதமர் பதவி காலியாகப் போவதில்லை. மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக வருவார். ஆனால் ஆணவ கூட்டணியில் பிரதமர் பதவிக்கு பல உரிமைகோரல்கள் உள்ளன. தங்கள் மாநிலத்திற்கு வெளியே தெரியாத தலைவர்கள் நாட்டின் தலைவர்களாக வருவதை பற்றி பேசுகிறார்கள். 

எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்பு

மேற்கு வங்கத்துக்கு வெளியே மம்தா பானர்ஜியை ஒரு தலைவராக மக்கள் கருதவில்லை. மகாராஷ்டிராவுக்கு வெளியே சரத் பவார் வெற்றியை பெறவில்லை. காங்கிரஸின் நம்பிக்கையை கெடுக்கும் வகையில் கே.சி. தியாகி ஜி இப்படி (I.N.D.I.A. கூட்டணியில் பிரதமராகும் திறன் கொண்ட பல்வேறு வேட்பாளர்கள் உள்ளனர்) ஒரு செய்தியை கொடுக்கிறார். எந்த அணியும் ஒரு கேப்டனும்தான் களம் இறங்கும். இப்போது அதே அணியில் 5-6 கேப்டன்கள் இருப்பதாக அவர் கூறுகிறார். 

பிரதமர் மோடி

பிரதமர் பதவிக்காக கனவு காண்பவர்களுக்கு இந்த கனவு நிறைவேறாமல் இருக்கும். பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் 2024ல் நாட்டின் ஆட்சியை பிடிப்பார், ஏனென்றால் நாட்டு மக்கள் அவருடன் உள்ளனர். உலகம் முழுவதும் இந்தியாவின் பெயரை உயர்த்தும்,  ஒரு உலகளாவிய தலைவரைக் நாடு கண்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த 8ம்  தேதியன்று நடைபெற்ற பா.ஜ.க. நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் மோடி, I.N.D.I.A. கூட்டணியை கமாண்டியா (திமிர் பிடித்தது) என்று குறிப்பிட்டார்.