கர்நாடக பாஜக நிர்வாகி மீது பாலியல் துன்புறுத்தல் வழக்குப்பதிவு

 
tn

தேவகவுடாவின் பேரனும் ஹாசன் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா  சில பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியது.  இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.  முன்னாள் கார் ஓட்டுநர் கார்த்திக் வீடியோ புகைப்படங்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது.  ஹாசன் ஹோலெநரசிபுரா பாஜக பிரமுகரும் வக்கிலுமான தேவராஜ் கவுடாவிடம் வீடியோ புகைப்படங்கள் இருந்த பென் டிரைவை கொடுத்ததாக கார்த்தி கூறி இருந்தார். 

tn

இதனால் தேவராஜ் கவுடா மீது சந்தேகம் இருந்தது.  ஆபாச வீடியோ வழக்கில் எம்.பி. பிரஜ்வால் சிக்கி உள்ளார்.  அடுத்து யாரை சிக்க வைக்கலாம் என்று முயற்சி நடந்து வருகிறது. பிரஜ்வாலின் ஆபாச புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியானதில் துணை முதல்வர் சிவகுமாருக்கு தொடர்புள்ளது. என்னிடம் எஸ்ஐடி  பெண் அதிகாரி ஒருவர் விசாரித்தார். அவரிடம் சிவக்குமார் பற்றி சில தகவல்கள் தெரிவித்துள்ளேன் என்றார். 

sexual abuse
இந்நிலையில் கர்நாடக பாஜக நிர்வாகி தேவராஜ் கவுடா மீது பாலியல் துன்புறுத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சொத்து விவகாரத்தில் உதவுவதாக கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக புகார் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ஹோலெநரசிபுரா நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் .