பாலியல் வீடியோ விவகாரம்- முன்ஜாமீன் கோரி பிரஜ்வல் ரேவண்ணா மனு

 
பிரஜ்வல் ரேவண்ணா

வரும் 31ம் தேதி இந்தியாவுக்கு திரும்பும் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய கர்நாடக மாநில சிறப்பு புலனாய்வு அமைப்பு திட்டமிட்டுள்ள நிலையில், கைதாவதில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள பிரஜ்வல் ரேவண்ணா தற்போது முன்ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

Image


பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா தற்பொழுது கைதுக்கு பயந்து வெளிநாட்டில் பதுங்கி உள்ளார். அவர் மீது தற்பொழுது வரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் 3 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். அவருக்கு எதிராக ஏற்கனவே ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவரது பாஸ்போர்ட்டை முடக்கக்கோரி கர்நாடக அரசு இரண்டு முறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. பிரஜ்வல் ரேவண்ணா இந்திய நாட்டிற்குள் நுழைந்தால் உடனடியாக அவரை கைது செய்ய காவல்துறை தயாராக உள்ள நிலையில் தன் மீது தொடரப்பட்டுள்ள மூன்று வழக்குகளுக்கும் முன்ஜாமின் வழங்கக்கோரி பெங்களூரு நகரில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். 

இந்த மனு நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் சிறப்பு புலனாய்வு குழு பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நாளை இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று பிரஜ்வல் வழக்கறிஞர் வேண்டுகோள் விடுத்த நிலையில் நீதிபதி அதை மறுத்து வழக்கை நாளை மறுநாள் ஒத்தி வைத்துள்ளார். 31ஆம் தேதி நாளை மறுநாள் தான் நாடு திரும்ப உள்ளதாக பிரஜ்வல் ஏற்கனவே வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் அதே நாள் அவரது ஜாமீன் கோரி உள்ள மனு விசாரணைக்கு வர உள்ளது.