ஓடும் ரயிலில் செக்ஸ்- 3 பேர் மீது வழக்குப்பதிவு

 
ச் ச்

டெல்லி RRTS ரயிலில் பாலியல் ரீதியாக நெருக்கமாக இருவர் இருந்த நிலையில், அந்த சிசிடிவி காட்சியை லீக் செய்த ரயில் நிர்வாக ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Navi Mumbai Bus News: Sex in Navi Mumbai bus, Couple traced, fined Rs 2,000  by court | Mumbai News - Times of India

காஜியாபாத் மற்றும் மீரட் இடையே ஓடும் நமோ பாரத் ரயிலின் பிரீமியம் பெட்டியில் ஒரு இளம் ஜோடி பாலியல் உடலுறவு மற்றும் பிற பாலியல் செயல்களில் ஈடுபட்டதாக டெல்லி-மீரட் பிரிவில் நமோ பாரத் ரயில்களின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பை மேற்கொள்ளும் நிறுவனமான DB-RRTS இன் பாதுகாப்புத் தலைவர் துஷ்யந்த் குமார் ஒரு மாதத்திற்கு முன் புகார் அளித்தார். இதனையடுத்து இதுதொடர்பாக காஜியாபாத் போலீசார் திங்கள்கிழமை இரவு எஃப்ஐஆர் பதிவு செய்தனர். அடையாளம் தெரியாத தம்பதியினர் மீதும், டிசம்பர் 3 ஆம் தேதி பணிநீக்கம் செய்யப்பட்ட ரயில் ஆபரேட்டர் ரிஷப் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லி RRTS ரயிலில் பாலியல் ரீதியாக நெருக்கமாக இருவர் இருந்த நிலையில், அந்த சிசிடிவி காட்சியை லீக் செய்த ரயில் நிர்வாக ஊழியர் டிசம்பர் 3 ஆம் தேதி பணிநீக்கம் செய்யப்பட்டார். அவர் ரயிலின் உள்ளே இருந்து தனது மொபைலில் அந்த வீடியோவை பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. ஆட்சேபனைக்குரிய செயலில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் தேடுகின்றனர்.  குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என காவல்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.