பாலியல் குற்றச்சாட்டு: எடியூரப்பா விளக்கம்

 
tn

17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில் கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா விளக்கமளித்துள்ளார். 

tn

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 17 வயது சிறுமியின் தாயார் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. POCSO சட்டத்தின் பிரிவு 8 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354 A ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுடன் வந்த தாய், நேற்று புகார் அளித்த நிலையில்  நள்ளிரவுக்கு மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.  கடந்த மாதம் பிப்ரவரி 2, 2024 அன்று தாயும் மகளும் மோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் முதலமைச்சரின் உதவியை நாடச் சென்றபோது பாலியல் வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. 

tn

இந்நிலையில்  கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா , சம்பந்தப்பட்ட சிறுமி, அவரது தாயுடன் சில நாட்களுக்கு முன் ஏதோ பிரச்னை என்று எனது வீட்டுக்கு வந்தார்; நானும் தனிப்பட்ட முறையில் போலீஸ் கமிஷனரை அழைத்து அவர்களுக்கு உதவச் சொன்னேன் திடீரென சிறுமியின் தாய் எனக்கு எதிராக பேசத் தொடங்கியதால் அதிர்ச்சி அடைந்தேன் நடந்த விவகாரம் தொடர்பாக காவல் ஆணையரிடம் தகவல் தெரிவித்த நிலையிலும் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.