மும்பையில் அடுத்தடுத்து 12 சிறுவர்கள் மாயம்!

 
nn nn

மும்பையில் கடந்த 36 மணிநேரத்தில் 12 சிறுவர்கள் காணாமல் போனதால் உயர் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Mumbai Police Rebuts Social Media Claims About Missing Children; Warns  Action Against Rumours


வெறும் 36 மணி நேரத்தில் மும்பை மாநகரம் முழுவதும் 12 சிறுவர்கள் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து "High Alert" விடுத்த மாநகர போலீசார், சிறுவர்களை மீட்க 10-க்கும் மேற்பட்ட தனிப்படைகளை அமைத்துத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கடத்தல் கும்பலின் கைவரிசையா அல்லது வேறு ஏதேனும் மர்மமா?பெற்றோர்களே குழம்பி வருகின்றனர். குழந்தைகளை ஒருபோதும் தனியாக விடாதீர்கள்!விழிப்புணர்வுடன் இருங்கள் என போலீசார் அறிவுறுத்துகின்றனர். 

ஓஷிவாராவில் 14 வயது சிறுவன் வகுப்பு சென்றான், ஆனால் திரும்பி வரவில்லை. ஆண்டாப் ஹில்லில் தோட்டத்தில் விளையாடச் சென்ற 12 வயது சிறுவன் காணாமல் போனான், மான்குர்ட் பகுதியில் பக்கத்து வீட்டுக்காரரை பார்க்க சென்ற 15 வயது சிறுவன் திரும்பி வரவில்லை, பங்கூர் நகரில் வேஃபர்கல் வாங்கும் 17 வயது சிறுமியை காணவில்லை. ஆண்டாப் ஹில்லில் 15 வயது சிறுமி வேலைக்காக சென்றால் ஆனால் திரும்பவில்லை. சிவாஜி நகரில் வீட்டைவிட்டு வெளியேறிய 12 வயது சிறுவன் காணாமல் போனான், சிவாஜி நகரில் வாக்குவாதத்திற்கு பிறகு வெளியேறிய 17 வயது சிறுவன் திரும்பி வரவில்லை, அதே சிவாஜி நகரில் தாய் இல்லாதபோது 17 வயது சிறுமி காணாமல் போனாள். சிவாஜி நகரில் தோட்டத்தில் விளையாட சென்ற 8 வயது சிறுவன் காணாமல் போனான், காட்கோபரில் டியூசனுக்கு சென்ற 17 வயது சிறுமி மாயமானார். சகினாகாவில் தந்தை வெளியேறியபோட் வீட்டில் இருந்த 14 வயது சிறுமி காணவில்லை, அதேபோல் சகினகாவில் 2 16 வயதுடைய சிறுமிகள் நகல் எடுக்க சென்றபோது மாயமாகினர். விசாரணைகள் தொடர்வதால் குடும்பங்களும், அதிகாரிகளும் தொடர்ந்து பதற்றத்தில் உள்ளனர்.

Advertisement