ராகுல் பேசிய பல வரிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்

 
fff

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உரையில் இருந்து பல வரிகள் நீக்கப்பட்டுள்ளன.

gg

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் உரையில் இடம்பெற்ற ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான கருத்துக்கள் பலவற்றை அவை குறிப்பில் இருந்து நீக்கி சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவு பிறப்பித்துள்ளார்.  சிறுபான்மை மக்களுக்கு எதிரானது பாஜக,  அதானி,  அம்பானி மீதான விமர்சனம் , நீட் தேர்வு வணிகமயம் ஆகிவிட்டது , அக்னிபாத் திட்டம் இராணுவத்திற்கானது அல்ல பிரதமர் அலுவலகத்திற்கானது என ராகுல் காந்தி பேசிய வரிகள் நீக்கப்பட்டுள்ளன.

t

 அதேபோல நரேந்திர மோடி ,பாஜக , ஆர் எஸ் எஸ் மட்டுமே இந்து சமூகம் கிடையாது என்று அவர் கூறிய வார்த்தைகளும் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.