ம.பி, ராஜஸ்தான் நிகழ்வுக்கு ராகுல் காந்திதான் பொறுப்பு! – உமா பாரதி பேச்சு

 

ம.பி, ராஜஸ்தான் நிகழ்வுக்கு ராகுல் காந்திதான் பொறுப்பு! – உமா பாரதி பேச்சு

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி பறிபோனதற்கும், ராஜஸ்தானில் பறிபோக உள்ளதற்கும் ராகுல்காந்திதான் பொறுப்பு என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் உமா பாரதி கருத்து தெரிவித்துள்ளார்.

ம.பி, ராஜஸ்தான் நிகழ்வுக்கு ராகுல் காந்திதான் பொறுப்பு! – உமா பாரதி பேச்சுமத்திய பிரதேசத்தைத் தொடர்ந்து ராஜஸ்தானில் ஆட்சியைப் பிடிக்க பாரதிய ஜனதா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எம்.எல்.ஏ-க்களை விளைக்கு வாங்குவது, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் ரெய்டு நடத்துவது என்று இதற்காக அது பல அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எம்.எல்.ஏ-க்களுக்கு கோடிக் கணக்கில் பணம் கொடுத்து தங்கள் பக்கம் இழுக்க பேச்சு வார்த்தை முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

ம.பி, ராஜஸ்தான் நிகழ்வுக்கு ராகுல் காந்திதான் பொறுப்பு! – உமா பாரதி பேச்சுராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் தலைமையில் 25 எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க பக்கம் தாவ உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் சச்சின் பைலட் செல்ல மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

ம.பி, ராஜஸ்தான் நிகழ்வுக்கு ராகுல் காந்திதான் பொறுப்பு! – உமா பாரதி பேச்சு
இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் உமா பாரதி கருத்து தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “ராஜஸ்தானில் தற்போது நடந்து வருவதற்கும் மத்திய பிரதேசத்தில் நடந்ததற்கும் ராகுல் காந்திதான் பொறுப்பு. அவர் இளம் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் வளர்வதை அனுமதிக்கவில்லை. இளம், திறமை மிக்க, நன்கு படித்த சச்சின் பைலட், ஜோதிராதித்ய சிந்தியா போன்றவர்கள் உயர் பதவிக்கு வந்தால் தான் பாதிக்கப்படுவோம் என்று கருதி அவர்களின் வளர்ச்சியைத் தடுக்கிறார்” என்றார்.