செகந்திராபாத் - திருப்பதி வந்தே பாரத் ரயில் எக்ஸ்பிரஸ் : முக்கிய அறிவிப்பு

 
tn

செகந்திராபாத் -  திருப்பதி வந்தே பாரத் ரயில் எக்ஸ்பிரஸ் ரயில் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

வருகிற மே 17ஆம் தேதி முதல் 8  பெட்டிகளுடன் இயங்கி வரும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 16 பெட்டிகளுடன் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலின் ஆக்கிரமிப்பு விகிதம் 130 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதால்,  பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

tn

அத்துடன் செவ்வாய்க்கிழமையை தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் செகந்திராபாத்தில் இருந்து அரை மணி நேரம் தாமதமாக புறப்படுகிறது.  தற்போது செகந்திராபாத்தில் இருந்து காலை 6 மணிக்கு திருப்பதிக்கு புறப்படும்.  வந்தே பாரத் ரயில் மே 17ஆம் தேதி முதல் காலை 6 :15 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  காலை 7 :29 மணிக்கு நல்கொண்டா , 9:35 மணிக்கு குண்டூர்,  11 :09 மணிக்கு ஓங்கோல்,  மதியம் 12 :29 மணிக்கு நெல்லை,  பிற்பகல் 2:30 மணிக்கு திருப்பதியை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

fb

 திருப்பதியில் இருந்து மாலை 3:15 மணிக்கு இந்த ரயில் புறப்படுகிறது . அதே ரயிலில் இரவு 11:30 மணிக்கு செகந்திராபாத் நிலையத்தை சென்றடையலாம் . செகந்திராபாத் - திருப்பதி விட , திருப்பதி - செகந்திராபாத் வழித்தடத்தில் பயணிகள் அதிகம் பயணிப்பதால் பயணிகளின் எண்ணிக்கை 532  லிருந்து 1036 ஆக உயரக்கூடும் என்று எதிர்பார்க்கிறது.