கப்ளிங் உடைந்து தனியாக ஓடிய ரயில் பெட்டிகள்- அலறிய பயணிகள்

 
க்

செகந்திராபாத்தில் இருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த ஃபலக்னுமா அதிவேக எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து ரயில் பெட்டிகள் தனியாகப் பிரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்திலிருந்து ஹவுரா நோக்கி ஃபலக்னுமா அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டுருந்தது. இந்த ரயில்  ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம்  பலாசா ரயில் நிலையத்தை தாண்டி புறநகர்ப் பகுதியை அடைந்து வேகமாக சென்று கொண்டிருந்த நிலையில், ரயில் பெட்டிகள் தனியாக கழன்று என்ஜின் தனியாக சென்றது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.  பல பெட்டிகள் ரயிலிலிருந்து பிரிந்து தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டன.

இருப்பினும், லோகோ பைலட் இதை கவனிக்காததால், இயந்திரமும் அதனுடன் இணைக்கப்பட்ட பெட்டிகள் சில கிலோ மீட்டர்  சென்றது. இருப்பினும் நின்ற ரயில் பெட்டியில் இருந்த பயணிகள் உஷாராகி ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து  ரயில்வே அதிகாரிகள் லோகோ பைலட்டிற்கு எச்சரிக்கை செய்து  விரைவாக சம்பவ இடத்திற்கு வந்தனர். உடனடியாக பெட்டிகளில் இருந்து பிரிந்து முன்னோக்கி நகர்ந்த ரயில் எஞ்சின் திரும்பப் பின்னாள் வரவழைக்கப்பட்டது. மேலும் பிரிந்த பெட்டிகளை ரயிலில் இணைக்கும் பணியை ரயில்வே அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டனர். பயணிகள் ரயிலில் இருந்து எவ்வாறு பெட்டிகள் பிரிந்தது என்பது குறித்த தகவல்களையும் ரயில்வே அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். இதனால் இந்த ரயில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கால தாமதமாக மீண்டும் புறப்பட்டது. மேலும் இந்த காலதாமதம் காரணமாக இதனை தொடர்ந்து அடுத்தடுத்து வந்த ரயில்களிலும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர்  காலதாமதமாக புறப்பட்டு சென்றது.