நிபா வைரஸ் எதிரொலி - இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவி வருகிறது. ஆயிரக்கணக்கானோருக்கு அங்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதன் காரணமாக கேரளாவில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரண்டு பேர் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் வைரஸ் பரவுவதைத் தடுக்க எல்லையோர மாவட்டங்களின் சோதனை சாவடிகளில் கண்காணிப்பைத் தீவிர படுத்த சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், நிபா வைரஸ் எதிரொலியாக கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 789 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 77 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் . கண்காணிப்பில் உள்ள 157 சுகாதர பணியார்களில் 13 பேர் கோழிக்கோடு மருத்துமனையில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். குட்டியாடி, ஆயஞ்சேரி பகுதியில் மத்திய குழுவீனர் இன்று ஆய்வு செய்யவுள்ளனர். வவ்வால் கணக்கெடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.