தனியார் மருத்துவமனைகளில் முதியவர்களுக்கே முன்னுரிமை – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தனியார் மருத்துவமனைகளில் முதியவர்களுக்கே முன்னுரிமை – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கொரோனா காலத்தில் அதிக இன்னலுக்குள்ளானது முதியவர்கள் தான். குறிப்பாக, ஆதரவற்று தனியாக வசிக்கும் முதியவர்களால் அத்தியாவசிய தேவைகளைக் கூட பூர்த்தி செய்துகொள்ள முடியவில்லை. கொரோனா லாக்டவுனில் பெரிதும் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிப்பதை உறுதிசெய்ய வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அஸ்வனி குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தனியார் மருத்துவமனைகளில் முதியவர்களுக்கே முன்னுரிமை – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்த வழக்கு 2020ஆம் ஆண்டு ஆகஸ்டில் விசாரணைக்கு வந்தபோது, அரசு மருத்துவமனைகள் முதியவர்கள் கொரோனா மட்டுமல்லாமல் எந்த உடல்நலக் கோளாறு ஏற்பட்டாலும் முன்னுரிமை அளித்து அவர்களைக் கவனிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல அந்தந்த மாநில அரசுகள் வயதானவர்களுக்கு முறைப்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும்; அவர்களுக்கு மருந்துகள், அத்தியாவசியப் பொருள்கள், மாஸ்க், சானிடைசர் என அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

தனியார் மருத்துவமனைகளில் முதியவர்களுக்கே முன்னுரிமை – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அதுதொடர்பான பாதுகாப்பை உறுதி செய்ததற்கான அறிக்கைகளையும் மாநில அரசுகள் சமர்பிக்க உத்தரவிடப்பட்டது. அதில் ஒடிசாவும் பஞ்சாப்பும் அறிக்கைகள் சமர்பித்தன. மற்ற மாநிலங்களுக்கு மூன்று வாரங்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் தனது உத்தரவைப் புதுப்பித்து புதிய உத்தரவு ஒன்றை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதில், அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாமல், அனைத்துத் தனியார் மருத்துவமனைகளும் முதியவர்களுக்கு முன்னுரிமை அளித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.