மணிஷ் சிசோடியா திகார் சிறையில் மற்ற கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

 
டெல்லியில் 31 ஆம் தேதி வரை பள்ளிகள் விடுமுறை- துணை முதல்வர் மணீஷ் சிசோடியா

மணிஷ் சிசோடியா திகார் சிறையில் மற்ற கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ளார் என்றும் நீதிமன்றம் அனுமதி அளித்தும் அவருக்கு விபாசனா சிறை மறுக்கப்பட்டுள்ளது என்று ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.

டெல்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அண்மையில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்தது. தற்போது மணிஷ் சிசோடியா திகார் சிறையில் உள்ளார். மூத்த குடிமகன்களுக்கான ஒரு தனி நபருக்கான சிறை எண்1-ல் மணிஷ் சிசோடியா அடைக்கப்படுவார் என்று அதிகாரிகள் முன்பு கூறியிருந்தனர்.

கொரோனாவிலிருந்து மீண்ட நிழலுலக தாதா சோட்டாராஜன்.. எய்ம்ஸிலிருந்து மீண்டும் திகார் சிறைக்கு மாற்றம்

இந்நிலையில், மணிஷ் சிசோடியா திகார் சிறையில் உள்ள மற்ற கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு விபாசனா செல்  மறுக்கப்பட்டுள்ளதாகவும் ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.  இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின்  தேசிய செய்தி தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், மணிஷ் சிசோடியாவை சிறையின் விபாசனா அறையில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது, அதற்கு நீதிமன்றமும் ஒப்புதல் அளித்தது. 

சவுரப் பரத்வாஜ்

நீதிமன்றத்தின் அனுமதி இருந்தபோதிலும், சிறை எண் 1ல் குற்றவாளிகளுடன் சிசோடியா வைக்கப்பட்டுள்ளார். இதற்கு மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும் என தெரிவித்தார். மணிஷ் சிசோடியா ஜாமீன் கோரி  நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு 10ம் தேதி (நாளை)  விசாரிக்கப்பட உள்ளது. மணிஷ் சிசோடியாவின் கைதுக்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.