குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் மோடியுடன் சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் சந்திப்பு

 
delhi delhi

டெல்லி வந்துள்ள சவுதி அரேபிய பட்டத்து இளவரசர், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்

இந்தியா தலைமை தாங்கிய ஜி-20 மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் பொருளாதாரம் மேம்பாடு, காலநிலை மாற்றம், எரிசக்தி விவகாரம் ,சர்வதேச கடன் கட்டமைப்பு, சீர்திருத்தம், கிரிப்டோ கரன்சி மீதான கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. பிரதமர் மோடி துவக்க உரையாற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். ஜி20 மாநாட்டில் ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினராக இணைக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி முன்மொழிந்த நிலையில் ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினரானது. கடந்த 2 நாட்களாக நடைபெற்ற வந்த ஜி20 உச்சி மாநாடு நேற்று நிறைவு பெற்றது.  2024ம் ஆண்டு ஜி20 உச்சி மாநாட்டை நடத்தும் தலைமை பொறுப்பை பிரேசில் அதிபரிடம் ஒப்படைத்தார் பிரதமர் மோடி. 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள G20 தலைமைப் பொறுப்பை பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். அடுத்த ஆண்டு ஜி20 உச்சி மாநாடு பிரேசிலில் நடைபெறவுள்ளது.

G20

இந்த நிலையில், ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லி வந்துள்ள சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமரான முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று ஒரு சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.