கட்டண பாக்கி இருந்தாலும், இறந்தவரின் உடலை மருத்துவமனை பிணையமாக வைத்திருக்க முடியாது.. சஞ்சீவ் அரோரா

 
சடலம்

கட்டண  பாக்கி இருந்தாலும், இறந்தவரின் உடலை மருத்துவமனை பிணையமாக வைத்திருக்க முடியாது என்ற சட்ட விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்று  ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சீவ்அரோரா வலியுறுத்தினார். 

ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்.பி.யும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் தொடர்பான நாடாளுமன்ற தற்காலிக குழுவின் உறுப்பினருமான சஞ்சீவ் அரோரா கூறியதாவது: இறந்தவரின் மருத்துவமனை கட்டணம் செலுத்தாவிட்டாலும், இறந்தவரின் உடலை மருத்துவமனையில் பிணையமாக வைத்திருக்க முடியாது. இந்த உரிமை நாட்டில் இருந்தும் இது போன்ற (உடலை பிணையாக வைத்திருப்பது) சம்பவங்கள் நடக்கின்றன. இந்த உரிமையை குடிமக்கள் அறிந்து கொள்ள வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் நான் அறிவுறுத்துகிறேன்.

சஞ்சீவ் அரோரா

மேலும் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும், சம்பந்தப்பட்ட நிர்வாகத்துக்கும் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நோயாளிகளின் உரிமைகள் சாசனத்தின்படி, இறந்தவரின் மருத்துவமனை கட்டணம் செலுத்தாவிட்டாலும், இறந்தவரின் உடலை மருத்துவமனையில் பிணையமாக வைத்திருக்க முடியாது. இறந்தவரின் உடலை மருத்துவமனையிடம் இருந்து பெறலாம் என்ற உரிமை உள்ளது என்பதை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.நிலுவையில் உள்ள  பில்கள், முறையான கண்காணிப்பு மற்றும் நீதியின்மை போன்ற பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் உடல்களை மருத்துவமனை ஒப்படைப்பதில்லை என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் இருந்து பல புகார்களை நான் தனிப்பட்ட முறையில் பெற்றுள்ளேன். 

டாக்டர் பிரவீன் பவார்

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சருக்கு கடிதம் எழுதுவேன்.  அவர்கள் (மருத்துவமனை) சட்டத்தை பின்பற்றவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு எதிராக விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். சமீபத்தில் நடந்த மாநிலங்களவை கூட்டத்தொடரில் இந்த கேள்வி எழுப்பட்டது. அதற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பிரவீன் பவார் பதிலளிக்கையில், நோயாளியின் உடலை விடுவிப்பதை மருத்துவமனைகள் எக்காரணம் கொண்டும் மறுக்க முடியாது என்று தெரிவித்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.