சி.பி.ஐ.யை என்னிடம் கொடுங்கள் 2 மணி நேரத்தில் மோடி மற்றும் அதானியை கைது செய்வேன்.. ஆம் ஆத்மி எம்.பி. ஆவேசம்

 
அதானி வழக்கு : உச்சநீதிமன்றம் இன்று விசாரணை..

சி.பி.ஐ.யை என்னிடம் கொடுங்கள் 2 மணி நேரத்தில் பிரதமர் மோடி மற்றும் கவுதம் அதானியை கைது செய்வேன் என்று ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்தார்.

டெல்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக நேற்று முன்தினம் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்தது. ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் சி.பி.ஐ. அலுவலகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையடுத்து அவர்களை டெல்லி காவல்துறை கைது செய்தது. நேற்று காலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு சஞ்சய் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை குறிவைக்கும் ஆம் ஆத்மி… உத்ரகாண்ட் பா.ஜ.க. முதல்வரை விமர்சித்த சிசோடியா

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், அவரது கட்சிக்கும் (ஆம் ஆத்மி) கெட்ட பெயரை கொண்டு வரும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடையும். டெல்லி முதல்வரை அவதூறு செய்ய பா.ஜ.க. முயற்சிக்கிறது. பிரதமர் மோடியின் சர்வாதிகாரத்துக்கு விரைவில் முடிவு வரும். அவர் நாட்டின் பிரபலமான கல்வி அமைச்சரை (மணிஷ் சிசோடியா) கைது செய்தார். அவர் அரவிந்த் கெஜ்ரிவாலை இழிவுப்படுத்த முயற்சிக்கிறார். ஆனால் இது போன்ற செயல்கள் அவரது இமேஜை பாதிக்காது. 

சஞ்சய் சிங்

சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்தது மத்திய அரசின் கோழைத்தனமான செயல். என்னிடம் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.டு. கொடுங்கள், நான் மோடி, அமித் ஷா மற்றும் கவுதம் அதானியை இரண்டு மணி நேரத்தில் கைது செய்வேன். புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படு்த உங்களுக்கு அதிகாரம் இருக்கும்போது நீங்கள் எதையும் செய்ய முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.