வெங்காய விலை விவகாரம்.. இந்த அரசுக்கு ஆட்சியில் இருக்க உரிமை இல்லை- மகாராஷ்டிரா அரசை சாடிய சஞ்சய் ரவுத்

 
அடுத்த 25 வருஷத்துக்கு சிவ சேனா தலைமையில்தான் ஆட்சி- சஞ்சய் ரவுத் உறுதி

இந்த அரசுக்கு ஆட்சியில் இருக்க உரிமை இல்லை என்று வெங்காய விலை விவகாரத்தில்  முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா, பா.ஜ.க. மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசாங்கத்தை உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா (யு.பி.டி.) சஞ்சய் ரவுத்  விமர்சனம் செய்தார்.

இந்த மாதம் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், செப்டம்பர் மாதத்தில் வெங்காயத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர். இந்நிலையில், உள்நாட்டு சந்தையில் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், உள்நாட்டில் சப்ளையை அதிகரிக்கவும் வெங்காய ஏற்றுமதி மீது 40 சதவீதம் வரி விதித்துள்ளது. இது கடந்த சனிக்கிழமை மாலை முதல் அமலுக்கு வந்தது.  மேலும் 2023 டிசம்பர் 31ம் தேதி வரை வெங்காயம் மீதான ஏற்றுமதி அமலில் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பண்ணை பசுமை கடைகளில்  இன்று முதல் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.45க்கு விற்பனை!

மேலும், கூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயம் கையிருப்பு வைக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,410 என்ற விலையில் 2 லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிசு செய்துள்ளது.  இந்த சூழ்நிலையில் வெங்காய விவகாரத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா, பா.ஜ.க. மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசாங்கத்தை உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா விமர்சனம் செய்துள்ளது.

ஏக்நாத் ஷிண்டே
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா (யு.பி.டி.) எம்.பி. சஞ்சய் ரவுத் கூறுகையில், இந்த அரசுக்கு ஆட்சியில் இருக்க எந்த தகுதியும் இல்லை. வெங்காயம் ஏழைகளின் உணவு. விவசாயிகள் வெங்காயத்தை ரொட்டியுடன் சாப்பிடுகிறார்கள். அதை நாம் பக்ரி என்று அழைக்கிறோம். மகாராஷ்டிரா விவசாயிகள் வெங்காயத்தை வாங்க முடியவில்லை. மக்கள் வெங்காயம் சாப்பிட முடியாது. எனவே இந்த அரசுக்கு ஆட்சியில் இருக்க உரிமை இல்லை. இது மகாராஷ்டிராவின் கலாச்சாரம் அல்ல என்று தெரிவித்தார்.