மோடியின் காலை தொட்ட பப்புவா நியூ கினியா பிரதமர்.. மோடியை பெரிய மந்திரவாதி என்று நினைத்திருப்பார்- சஞ்சய் ரவுத்

 
இந்திய பிரதமர் மோடியின் காலை தொட்டு வணங்கிய ஜேம்ஸ் மார்பே

மோடியை பெரிய மந்திரவாதி என்று நினைத்திருப்பார்கள் என்று பிரதமர் மோடியின் காலை  பப்புவா நியூ கினியா பிரதமர் தொட்டு வணங்கிய சம்பவத்தை சஞ்சய் ரவுத் கிண்டல்  தெரிவித்தார்.

இந்திய-பசிபிக் தீவுகளின் ஒருங்கிணைந்த மாநாட்டில் பங்கேற்க பப்புவா நியூ கினியா  நாட்டுக்கு பிரதமர் மோடி நேற்று முன்தினம் சென்றார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மார்பே விமான நிலையத்தில் வரவேற்றார். அப்போது இந்திய பிரதமர் மோடியின் காலை தொட்டு ஜேம்ஸ் மார்பே வணங்கினார். இது சம்பவம் உலகம் முழுவதும் மிகவும் வைரலானது. 

சஞ்சய் ரவுத்
இது தொடர்பாக உத்தவ் தாக்கரே சிவ சேனாவின் (யுபிடி) மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் கூறுகையில், பா.ஜ.க. பப்புவா நியூ கினியா நாட்டின் வரலாற்றை புரிந்து கொள்ள வேண்டும். அந்நாடு சூனியத்தால் நிறைந்துள்ளது. நாட்டில் உள்ளவர்கள் நிறைய சூனியம் செய்கிறார்கள். இந்தியாவில் இருந்து யாரோ பெரிய மந்திரவாதி வந்திருப்பதாகவும் அவர் தங்களுக்கு மந்திரம் கற்பிப்பார்கள் என்று நினைத்தார்கள். அதனால் அவர்கள் அவரை அப்படி வாழ்த்தினர்.

நேரு

வயதானவர் என்பதால் பிரதமர் மோடியின் பாதங்களை யாராவது தொட்டு வணங்கினால் நல்லது. நாங்களும் அவரை சந்திக்கும்போது குனிந்து நமஸ்காரம் செய்வோம். ஆனால், பா.ஜ.க. அதைப் பற்றி பிரச்சாரம் செய்யும் விதம் சரியில்லை. எங்கள் தலைவர்களான பண்டிட் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தியும் நாட்டை விட்டு வெளியே சென்றிருக்கிறார்கள், மக்கள் அவர்களின் கால்களையும் தொடுவார்கள் என்று தெரிவித்தார்.