கட்டுக்குள் வராத கொரோனா பரவல்…..கோயில்களை திறக்க தயக்கம் காட்டும் மகாராஷ்டிரா அரசு…

 

கட்டுக்குள் வராத கொரோனா பரவல்…..கோயில்களை திறக்க தயக்கம் காட்டும் மகாராஷ்டிரா அரசு…

மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கோயில்களை திறக்க அம்மாநில அரசு தயக்கம் காட்டி வருகிறது.

நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் வழிபாட்டு தலங்கள் பக்தர்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால் மகாராஷ்டிராவில் மட்டும் இன்னும் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. நாளுக்கு நாள் அங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வழிபாட்டு தலங்களை திறக்க அம்மாநில அரசு தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது.

கட்டுக்குள் வராத கொரோனா பரவல்…..கோயில்களை திறக்க தயக்கம் காட்டும் மகாராஷ்டிரா அரசு…
சஞ்சய் ரவுத்

கோயில்கள் திறப்பது தொடர்பாக சிவ சேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ரவுத் கூறியதாவது: மகாராஷ்டிராவில் கோயில்களை அடைத்து வைத்திருக்க அரசு விரும்பவில்லை. முழு ஏற்பாடுகளுக்கு பிறகே கோயில்களை திறப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

கட்டுக்குள் வராத கொரோனா பரவல்…..கோயில்களை திறக்க தயக்கம் காட்டும் மகாராஷ்டிரா அரசு…
மும்பை சித்தி விநாயகர்

கடந்த ஜூன் 8ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்களை பக்தர்களுக்காக மீண்டும் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இருப்பினும் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், மத்திய அரசு அனுமதி அளித்தும் மகாராஷ்டிரா அரசு மத வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.