என்னை கொல்ல ஒப்பந்த கொலையாளியை நியமனம் செய்தார்.. மகாராஷ்டிரா முதல்வரின் மகன் மீது சஞ்சய் ரவுத் குற்றச்சாட்டு

 
சஞ்சய் ரவுத்

என்னை கொல்ல ஒப்பந்த கொலையாளியை நியமனம் செய்துள்ளார் என்று மகாராஷ்டிராவின் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே மீது சஞ்சய் ரவுத்  குற்றம் சாட்டினார்.

உத்தவ் பாலாசாகேப் தாக்கரே பிரிவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ரவுத், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகனும், எம்.பி.யுமான ஸ்ரீகாந்த் ஷிண்டே என்னை கொல்ல தானேயை சேர்ந்த ஒப்பந்த கொலையாளியை நியமித்துள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும் இது தொடர்பாக மும்பை  போலீஸ் கமிஷனர் விவேக் பன்சால்கருக்கும், மகாராஷ்டிரா துணை முதல்வரும், அம்மாநில உள்துறை அமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ், தானே மாநகர காவல்துறை ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில், தானேவை சேர்ந்த ராஜா தாக்கூருக்கு என்னை கொல்ல ஸ்ரீகாந்த் ஷிண்டே ஒப்பந்தம் கொடுத்தார்.

ஸ்ரீகாந்த் ஷிண்டே

இது தொடர்பான தகவலை உறுதி செய்துள்ளேன். ஒரு பொறுப்புள்ள குடிமகனாக நான் உங்களுக்கு தெரிவிக்கிறேன். மாநிலத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு எனது பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது. இது போன்ற அரசியல் முடிவை பற்றி எனக்கு எந்த புகாரும் இல்லை. மகாராஷ்டிராவில் மோசமடைந்து வரும் சட்டம் ஒழுங்கு நிலைமைக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் என தெரிவித்து இருந்தார்.

ஏக்நாத் ஷிண்டே

சஞ்சய் ரவுத்தின் குற்றச்சாட்டுக்கள் குறித்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், தாக்குதல் நடத்த குண்டர் பணியமர்த்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் ரவுத்தின் ஸ்டண்டா என்றும் விசாரணையில் தெரியவரும். பாதுகாப்பு  வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஆனால் இது  போன்ற விஷயங்களில் விளையாட முயற்சித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் யாருக்கு பாதுகாப்பு வழங்குவது என்பது குறித்து ஆராய ஒரு குழு இருப்பதால் அதற்கேற்ப நிலைமை கவனிக்கப்படும் என தெரிவித்தார்.