யோகி ஆதித்யநாத் ஆட்சியில் இருந்து வெளியேறியவுடன் இந்த புல்டோசர்கள் அவரை நோக்கி திரும்பும்.. சமாஜ்வாடி எம்.பி.

 
ஷபிகுர் ரஹ்மான் பார்க்

உத்தர பிரதேசத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களின் சொத்துக்கள் புல்டோசர் மூலம் இடிக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, யோகி ஆதித்யநாத் ஆட்சியில் இருந்து வெளியேறியவுடன் இந்த புல்டோசர்கள் அவரை நோக்கி திரும்பும் என்று சமாஜ்வாடி எம்.பி. தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசாங்கம் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்படுவது தற்போது வாடிக்கையான நிகழ்வாக மாறி விட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையம் கேங்ஸ்டர் அதிக் அகமதுவின் நெருங்கிய உதவியாளரான ஜாபர் அகமதுவின் வீட்டை புல்டோசர் மூலம் இடித்தது. இதற்கு சமாஜ்வாடி எம்.பி. ஷபிகுர் ரஹ்மான் பார்க் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

புல்டோசர், யோகி ஆதித்யநாத்

சமாஜ்வாடி எம்.பி. ஷபிகுர் ரஹ்மான் பார்க் கூறுகையில், யோகி ஆதித்யநாத் ஆட்சியில் இல்லாதபோது, இந்த புல்டோசர்கள் அவரை நோக்கி திரும்பும். பிரயாக்ராஜில் புல்டோசர் நடவடிக்கை ஒரு தண்டனை அல்ல, ஆனால் குறிவைக்கப்படுபவர்களுக்கு அநீதி. நாட்டில் சட்டம் இருக்கும் போது, சட்டப்படி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இது ஜனநாயகம் ஆனால் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தார். 

விஷ்வ இந்து பரிஷத்

மேலும், மொராதாபாத்தின் பெயரை மாற்ற  விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு கோரிக்கை விடுத்து இருப்பது குறித்து ஷபிகுர் ரஹ்மான பார்க் கூறுகையில், எந்த விலை கொடுத்தேனும் பெயரை மாற்ற அனுமதிக்க மாட்டோம். இந்த  நடவடிக்கையை எதிர்ப்பதற்கான அனைத்து வழிகளையும் ஆராய்ந்து வருகிறேன் என தெரிவித்தார்.