காங். கட்சி பொறுப்பில் இருந்து சாம் பிட்ரோடா ராஜினாமா

 
காங். கட்சி பொறுப்பில் இருந்து சாம் பிட்ரோடா ராஜினாமா

காங்கிரஸ் கட்சியின் பொறுப்பில் இருந்து சாம் பிட்ரோடா பதவி விலகியுள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Image

இந்தியாவின் கிழக்கு பகுதியில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்கள் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்ரிக்கர்களைப் போலவும் தோற்றமளிக்கின்றனர். அத்தகைய பன்முகத்தன்மை கொண்டது இந்தியா என காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்திருந்தார்.

சாம் பிட்ரோடாவின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் பதவியிலிருந்து சாம் பிட்ரோடா ராஜினாமா செய்துள்ளார். பிட்ரோடாவின் விலகல் முடிவை ஏற்று கொண்டதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது. இந்தியர்களை நிறத்தின் அடிப்படையில் ஒப்பிட்டு பேசிய சாம் பிட்ரோடாவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். சாம் பிட்ரோடா கருத்துக்கும் காங்கிரசின் கருத்துக்கும் தொடர்பில்லை என காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.

அதேசமயம் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சாம் பிட்ரோடா ராஜினாமா செய்தார். தென்னிந்திய மக்களை ஆப்ரிக்கர்களுடன் ஒப்பிட்டு சாம் பிட்ரோடோ பேசியது சர்ச்சையான நிலையில், அவர் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்