"சோனம், போதும் நண்பா... இதைத் தொடர வேண்டாம்"- சல்மான் கான் வேண்டுகோள்

 
s

உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு சோனம் வாங்சுக்கிடம் வேண்டுகோள் விடுத்துள்ள நடிகர் சல்மான் கான்,  மாணவர்களை வீடு திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளார்.

நடிகர் சல்மான் கான் வெளியிட்டுள்ள பதிவில், சோனம் வாங்சுக்கை அவரது உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். "சோனம், போதும் நண்பா. இதைத் தொடர வேண்டாம்... ஏதாவது சாப்பிடுங்கள். வேண்டுமென்றால், வீட்டிலிருந்தே உங்களுக்கு உணவு அனுப்பி வைக்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தங்கள் பெற்றோரிடமும் வீட்டிற்கும் திரும்புமாறும் சல்மான் கான் வலியுறுத்தியுள்ளார். மாணவர்களின் பாதுகாப்பும் கல்வியுமே மிக முக்கியம் என்று குறிப்பிட்ட அவர், நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவின் அடிப்படையில், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.